• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘சந்திரயான்’ வெற்றியை கொண்டாடிய ‘சிவகாசி’ வானவெடிகள்…

ByKalamegam Viswanathan

Aug 25, 2023

இன்று நிலவில் கால் பதித்த ‘சந்திரயான்’ வெற்றியை, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வானவெடிகள் வெடித்து கொண்டாடினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நிலவில் சந்திரயான் விண்கலம் கால் பதித்ததை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி கொண்டாட்டங் களுக்காகவே தயாராகும் சிவகாசி பட்டாசுகள் வானத்தில் வெடித்து சிதறின. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், சந்திரயான் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சந்திரயான் வெற்றியை கொண்டாடும் வகையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சோனி கணேசன் தலைமையில், சங்கத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இன்று இரவு, கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசியில் தயாரான பலரக வானவெடிகள் வானத்தில் வெடித்து வர்ணஜாலம் காட்டியது. சந்திரயான் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சிவகாசியில் நடைபெற்ற ‘சந்திரயான்’ வெற்றி கொண்டாட்ட வானவேடிக்கை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர். வெற்றிகரமாக சந்திரயானை இயக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துகள் கூறி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.