• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்..,

ByKalamegam Viswanathan

May 6, 2025

புரட்சித்தலைவி அம்மா 18.7.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்து என்ற தீர்ப்பை பெற்று தந்தார். அதை எதிர்த்து மறு ஆய்வுக்கு சென்றது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு.

நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் மா சு.நீலிக்கண்ணீர் வடிக்கிறார். நீட் தேர்வு ரத்து ரகசியம் வெளியிடுவோம் என்று கூறிய ஸ்டாலின்,உதயநிதி குடும்ப நாடக கம்பெனி ஆழ்ந்த உறக்கத்தில், மயான அமைதியில் மவுனம் காத்து வருகிறது.

நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட 23 மாணவர்கள் உயிருக்கு உதயநிதி ஸ்டாலின் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு.

மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது;

தமிழ்நாட்டிலே நீண்டு கொண்டே போகும் நீட் நாடகம் ஸ்டாலின் உதயநிதி குடும்ப நாடகக் கம்பெனி நடத்துகின்ற இந்த நாடகம் உதயநிதி அறிவித்த நீட் தேர்வு ரத்து ரகசியம் எப்போது வெளிவரும் ? நீட் தேர்வு என்ற வார்த்தையை நாட்டிற்கு அறிமுகம் செய்ததை காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுதான்,

2009 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ்,திமுக கூட்டணி அரசு அமைந்தது. திமுகவைச் சேர்ந்த ஏழு பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் நீட் தேர்வு மசோதாவை காங்கிரஸ்,திமுக கூட்டணி அரசு கொண்டு வந்தது, அப்போது திமுகவைச் சேர்ந்த எஸ். காந்தி செல்வன் என்பவர்தான் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வைத்தார்.

நீட் தேர்வை காங்கிரஸ்,திமுக அரசு அறிமுகப்படுத்திய போது அதனை புரட்சித்தலைவர் அம்மா அவர்கள் கடுமையாக எதிர்த்தாலும் ,இதற்காக சட்டப் போராட்டத்தையும் கையில் எடுத்தார்.புரட்சித்தலைவி அம்மாவின தொடர் சட்டப் போராட்டத்தால் நீட் நுழைவுத் தேர்வை 18 .7.2003 அன்று உச்ச உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வு ரத்து செய்தது ஆனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை,எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்துள்ளதாகவும், நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் எனவும் அன்றைய காங்கிரஸ் அரசின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

பின்னர் காங்கிரஸ் அரசு நீட் தேர்வு ரத்து தீர்ப்பின் மீது மறு ஆய்வை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இதற்கு எதிராக மீண்டும் சடட வல்லுனர்களுடன் ஆலோசித்து எதிர் மனுவை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாக்கல் செய்தார். துரதிஷ்டவசமாக மீண்டும் நீட் தேர்வு நடத்தலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு நாடெங்கிலும் அமல்படுத்தப்பட்ட போதும், அம்மாவின் அரசு ஒரு வருட காலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றது.அதன் பிறகு எத்தனையோ வலிமை வாய்ந்த சட்ட போராட்டங்களையும், மத்திய அரசு சந்திப்புகளையும் அம்மாவின் அரசு அடுத்தடுத்து நடத்தியது.

ஆனால் காங்கிரஸ்,திமுக கூட்டணி அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தான் நீட் தேர்வு கட்டாய நடைமுறைக்கு வந்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக அம்மாவின் வழியில் எடப்பாடியார் சட்ட போராட்டங்களையும், எல்லாவித முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டார் இதற்காக பலமுறை மத்திய அரசையும் நேரடியாகவும் கடிதம் மூலமாக வலியுறுத்தினார்.

நீட் தேர்வை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்களுக்கு மத்தியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய விழிம்பு நிலையிலே உள்ள மாணவர்கள் எதிர்காலத்திற்கு கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர் எடப்பாடியார்

2018, 2019 ஆம் ஆண்டுகளில் நான்கு பேர்கள், ஐந்து பேர்கள் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு தகுதி பெற்றிருந்தனர். ஆனால் சமூக நீதி காவலர் எடப்பாடியார், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கான்ஸ்டியூசன் ஆப் இந்தியா சட்டபிரிவின் 162 படி சட்டசபையில் நிறைவேற்றினார். மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தருகிற கால அவகாசம் ஈட்டிக்கொண்டே செல்கிறபோதும் உடனடியாக அந்த சட்ட மசோதாவை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று சட்டத்தை நிறைவேற்றிய இந்தியாவிலே ஒரு முதலமைச்சர் உண்டு என்று சொன்னார் அது எடப்பாடியார்தான்.

7.5 சகவித இட ஒதுக்கீட்டுக்கு பின் இதுவரை 2,823 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றிருக்கிறார் என்று சொன்னால் அத்தனை பெருமைகளையும் ,சிறப்பு வழிகாட்டுதலும் உருவாகி தந்து இட ஒதுக்கீடு மூலம் படிக்கட்டு போட்டு புரட்சித் தந்தவர் எடப்பாடியார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நீட் பெறுவதற்கு காரணமாக இருந்து விட்டு, நீட் தேர்வை அதிமுக தான் கொண்டு வந்தது என்று அப்பாவும்,மகனும் அவதூறு பரப்புகின்றனர். தேர்தலையொட்டி வழக்கமாக இரட்டை வேட கதையுடன் ஸ்டாலின் அசத்தலான நடிப்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் என்ற நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

நீட் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆட்சியில் பங்கு வைத்தது திமுக ,சம்பந்தப்பட்ட மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் வைத்திருந்து திமுக, உச்சநீதிமன்ற ரத்து செய்யப்பட்டது அதனை எதிர்த்து மறு ஆய்வு செய்து காங்கிரஸ் திமுக ,மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு அனுமதி நடத்த அனுமதி பெற்றதுகாங்கிரஸ் திமுக,இப்படி நீட் தேர்வுக்கு முதல் காரணம் ,முழு காரணம் காங்கிரஸ் திமுக கூட்டணி தான். திமுக நீலி கண்ணீர் வடிப்பதை மக்கள் நம்ப தயாராக இல்லை .நீட் தேர்வை கொண்டு,வந்து விட்டு தற்போது நீட் தேர்வில் தாலியை கழட்ட சொல்லுகிறார்கள் என அமைச்சர் மாசு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் என்றார் ஸ்டாலின் ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீட் தேர்வு ரத்து செய்ய வழி தெரியவில்லை குழு போடுவதற்கும் தீர்மானம் போடுவது மட்டுமே நேரம் போகவில்லை

ஸ்டாலின் குடும்ப நாடக கம்பெனிக்கு நேரம் போதவில்லை,
நீட் தேர்வை ரத்து செய்ய என்னிடம் ரகசியிருப்பதாக சொன்னார் ஸ்டாலின் வாரிசு உதயநிதி இன்னும் அந்த ரகசியத்தை சொல்லாது ஏன்? ஒருவேளை ரகசியத்திற்கான மந்திரத்தை மறந்து விட்டாரா உதயநிதி ஸ்டாலின்?

தேர்தலுக்கு முன் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் பொய்வாக்குறுதியை அளித்து தமிழ்நாட்டு மக்களை பகிரங்கமாக ஏமாற்றி நம்பிக்கை துரோகத்தை திமுகவினர் செய்து விட்டனர், துரோகம் திமுக வேறு அல்ல என்பதை மக்களுக்கு மீண்டும் உணர்த்தி உள்ளது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நம்பி காத்திருந்த மாணவர் செல்வங்கள் இன்றைக்கு 23 பேர் தற்கொலை செய்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

ஆகவே இன்றைக்கு திமுகவும் துரோகம் வேறு அல்ல என்பது இந்த உயிரிழப்பு சம்பவமே சாட்சியாக இருக்கிறது. உயிரிழந்த ஒவ்வொரு மாணவரின் உயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர் சமுதாயம் இன்றைக்கு துடித்துக் கொண்டிருக்கிறது, உதயநிதி ஸ்டாலின் அறிவித்த நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உடனடியாக வெளியிட்டு தொடரும் மாணவர்களின் தற்கொலை தடுத்து நிறுத்த முன்வருவாரா? அல்லது எப்போதும் போல மௌனம் காத்து நீட் ரகசியம் மாதிரியான புதிய ஸ்கிரிப்டுடன் மக்களையும் மாணவர்களின் ஏமாற்ற போகிறாரா? இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய மாணவருடைய கேள்வியாக இருக்கிறது.

ஆகவே தான் இதை தான் எடப்பாடியார் கேட்கிறார் நீட் தேர்வு ரத்து ரகசியம் எனும் பொய் நாடகத்தால் தொடர்ந்து தமிழ்நாட்டு மாணவரிடம் உயிர் பறிபோவதைக் கண்டு நம்முடைய நெஞ்சமெல்லாம் பதை பதைக்கிறது உள்ளமெல்லாம் கொதிக்கிறது ஆனால் நீட் தேர் ரகசியம் வெளியிடுவோம் எனக் கூறிய ஸ்டாலின் உதயநிதி குடும்ப நாடக கம்பெனியில் ஆழ்ந்த உறக்கத்தில் மயான அமைதியில் மௌனம் காத்து வருகிறது நீதி கேட்க நாதி இல்லையா, என மாணவ சமுதாயம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது .இந்த சுயநிலையை துடைத்தெறிந்து ஸ்டாலின் உதயநிதி குடும்ப நாடக ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர் சமுதாயத்தை மீட்டெடுப்போம் பாதுகாப்போம் என கூறினார்.