• Sat. Apr 27th, 2024

மதுரையில் சாலை விதிகளை மதிக்காமல், இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்

ByN.Ravi

Mar 4, 2024

மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறது. மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர், கல்லுப்பட்டி, கருப்பாயூரணி, விக்ரம் மருத்துவமனை, திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளிலும் மதுரை நகரில் பல்வேறு இடங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் அரசு பஸ் நிறுத்துகின்ற இடங்களில், போக்கு
வரத்துக்கு இடையூறாக, நிறுத்தியும், அதிக பயகளை ஏற்றிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மேலும் பயணிகள் பஸ்களுக்கு செல்ல
முடியாதபடி, பஸ் படிக்கட்டு அருகே இடையூறாக நிறுத்துகின்றனராம்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் பலர் அரசு பெர்மிட் இன்றி, சாலை விதிகளை கடைபிடிக்காமல், இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல் துணை, மற்றும் உதவி ஆணையாளர், ஆய்வாளர்கள், ஆகியோர்களுக்குபுகார் மனுக்கள் அனுப்பியும், மதுரை மாவட்டத்தில் விதிகளை கடைபிடிக்காமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
பல இடங்களில் ஆட்டோக்கள், அரசு பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி பொதுமக்கள் பஸ்ஸுக்கு செல்ல முடியாத அளவுக்கு தொந்தரவு செய்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை, சிம்மக்கல் பஸ் நிறுத்தம், மதுரை அண்ணாநகர், சுகுணா ஸ்டோர், அம்பிகா தியேட்டர், புதூர் பஸ் நிறுத்தம் ,மற்றும் சோழவந்தான் நகரில் வேப்பமரம் ஸ்டாப், மாரியம்மன் கோயில், மருது மஹால், திருமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் ஸ்டாப் அருகே சாலைகளில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்திக் கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். மேலும், கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் இருபுறங்களில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்துவதால், மதுரை மற்றும் சிவகங்கையிலிருந்து இருந்து செல்லும் வாகனங்கள், பஸ்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசலில் சிக்கி தவிக்கின்ற நிலை ஏற்படுகிறது.
இது குறித்தும், அப்பகுதி போலீசார், போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் முக்கியஸ்தர்கள், அரசு அதிகாரிகள் சிலர் பினாமி பெயரில் ஆட்டோக்களை இயக்குவதாகவும், ஆகவே, மதுரை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும்,மதுரை நகரில் சிட்டி பஸ்கள் போல இயக்கப்படும். ஆட்டோக்களை கட்டுப்படுத்தி, சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதை அகற்ற, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட ,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *