மதுரை மாவட்டம் சிந்தாமணி சாலை சிவகாமி ரைஸ் மில் அருகே நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மதுரவல்லி வயது 19 சூரிய பிரகாஷ் 22 இருவரும் லாரியின் அடியில் சிக்கி விபத்துக்கு உள்ளானார்கள்.

இதில் மதுரவல்லி என்கின்ற மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் படுகாயம் அடைந்த சூரிய பிரகாஷ் காலில் தையல் போட்ட வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நின்று கொண்டு இருந்த லாரி என்பதால் உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை தப்பி ஓடிய ஷேர் ஆட்டோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுக்கின்றன. மேலும் நாளுக்கு நாள் பேருந்து நிறுத்தங்களில் ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏறவிடாமல் அதிக அளவு தொல்லை செய்வதாகவும் நினைத்த இடத்தில் வாகனத்தை நிறுத்துவதாகவும் அதிக அளவு ஆட்களை ஏற்றி அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு ஆட்டோக்களை இயக்குவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதனை தடுக்க போக்குவரத்து காவலர்களும் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் இணைந்து ஷேர் ஆட்டோக்களை தீவிரமாக கண்காணித்து உரிமம் இல்லாத அதிக அளவு ஆட்டோ க்களில் ஆட்களை ஏத்தும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தற்பொழுது இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சியானது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.