• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது…ம்ம்க்கும்..சண்முகக்கனி

Byகாயத்ரி

Feb 5, 2022

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சண்முகக்கனி

இந்த கூட்டத்தில் பேசிய சாத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலர் சண்முகக்கனி, அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்துவிட்டு எந்தக் கவுன்சிலராவது கட்சி மாறினால் அவனை வீடு தேடி வந்து வெட்டுவேன். மாவட்டச் செயலரிடம் சொல்லிவிட்டும் வெட்டுவேன். இதோடு நிறுத்திவிடாமல், அப்படி வெட்டும்போது, என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும். கட்சியில் ஜெயித்துவிட்டு எவனாவது கட்சிமாறிப் போனால் உங்க போஸ்ட்மார்ட்டம் ஜி.ஹெச்-ல்தாண்டா, எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கூட்டத்திற்கு வந்தவர்களே அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சண்முகக்கணி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் காவல்நிலைய போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அவரது வீட்டில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறை அவரை கைது செய்ய முயன்ற போது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தப்பித்து செல்ல முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு தற்பொழுது கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திமுகவில் பலர் இதனை சாக்காக வைத்துக்கொண்டு அதிமுகவை ஏளனமாக பார்த்து கொண்டு இருக்கிறது.இது போன்ற நிகழ்வுகள் திமுகவில் நடக்கவில்லையா ..? இல்லை இவர்கள் சாமானியாமான ஆட்களா..? திமுகவை குறை கூற பல தவறுகள் அவர்கள் செய்தள்ளாரகள். அதை பட்டியிலிட்டால் நாடு தாங்காது.அதேபோல் ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது என்று அதிமுகவின் ரர கூட்டம் சொல்கிறது. நாம் என்ன தவறு செய்தோம் என்று திமுகவும் சற்று புரட்டி பார்த்தால் நல்லது என்கிறனர் பலர்.