• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா

ByAnandakumar

May 10, 2025

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அலங்காரவல்லி, அருள்மிகு சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பக்தர்கள் வழங்கிய பல்வேறு வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் கட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.