

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘ஷாஜஹான்’ படத்தை இயக்கியவர் ஆச்சார்யா ரவி! பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ரவி. ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய பின்பு ஆச்சார்யா ரவி ஆனார். அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான், அரவிந்த சாமி நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே, பிரபு நடிப்பில் வெளியான தர்மசீலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
உடல் நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவி, இன்று காலை மாரடைப்பால் காலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

