மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பல்வேறு இடங்களில் சாலைகளில் தெருக்களில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளங்களை தோண்டி சென்றுள்ளனர்.
அவ்வாறு தோன்டிய பள்ளங்களை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது மன்னாடிமங்கலம் விநாயகர் கோவில் அருகில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டிய நிலையில் 10 நாட்களுக்கு மேலாகியும் பள்ளத்தை மூடாததால் அந்தப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும் ஊராட்சியின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயை மறித்து பள்ளம் தோன்டியுள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கிக் சுகாதார கேடு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர் இதுகுறித்து கேட்டால் நாங்கள் எப்போது மூடுவோம் என்று தெரியாது என்று அதிகார தோரணையில் பதில் சொல்வதாகவும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கூறினால் ஊராட்சியில் சென்று சொல்லுங்கள் என பேசுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மன்னாடிமங்கலம் ஊராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் அந்தப் பகுதியில் வெளியேறும் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
ஆகையால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன் பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் மேலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மூட வேண்டும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் சில தினங்களுக்கு முன்பு தேனூர் சமயநல்லூர் சாலையில் குடிநீர் குழாய் தோண்டிய பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.










