• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனி வரிசை: இன்று முதல் அமல்

ByA.Tamilselvan

Dec 19, 2022

சபரிமலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள், முதியவர்களுக்கு இன்று முதல் தனி வரிசை அமலுக்கு வருகிறது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்பதால் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தன. பதினெட்டாம் படிக்கு முன்னதாக நடை பந்தல் பகுதியில் இருந்து தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 18 படி ஏறும் முன் அவர்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதும் ஓய்வெடுக்க தனி வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
கேரளா உயர் நீதிமன்ற தனி நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவை தொடர்ந்து கேரளா தேவசம் போர்டு அதை நடைமுறை படுத்தியது குறிப்பிடத்தக்கது.