• Fri. Apr 26th, 2024

தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட்..

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

நிழல் நிதிநிலை அறிக்கை,வேளாண் நிதிநிலை அறிக்கைஎன்ற பெயர்களில் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 15 ஆண்டுகளாக தனது பட்ஜெட் எதிர்பார்ப்புகளையும், ஆட்சியில் இருந்தால் தான் என்ன செய்திருப்போம் என்பதையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அதன்பிறகு, விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பிப் பெற்றுக் கொண்ட பிறகு தமிழக அரசு தாக்கல் செய்யும் முதல் வேளாண் பட்ஜெட் இது.

கடந்த ஆண்டின்தமிழக வேளாண் பட்ஜெட்டின்அதாவது தமிழகத்தின் முதல் விவசாய பட்ஜெட்டில் மாநிலத்தில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

விவசாயத்திற்கு ஏதுவாக கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் வேளாண்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
பனை விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக, விவசாயிகளுக்கு 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பனைவெல்லம் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்பது பலரின் வரவேற்பையும் பெற்றது.
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய – மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைப்பது, பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் வழங்குவது, கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 போன்ற அறிவிப்புகளும் கடந்த வேளாண் பட்ஜெட்டின் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.

தமிழக முன்னாள்முதலமைச்சர்கலைஞர் கருணாதியின் பெயரில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பாசன பரப்பை வலுப்படுத்துவது, சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணை முறையை ஊக்குவிப்பது என அரசு அறிவித்தது.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு, அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ25 லட்சம் செலவில் நெல் விதைகள் உற்பத்தி, உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை கள் என பல திட்டங்கள் வேளாண் பட்ஜெட் 2021-22இல் அறிவிக்கப்பட்டன.

சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 ஹார்ஸ் பவர் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும் என்றும் கடந்த ஆண்டு தமிழக வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதியளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *