சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருதுபாண்டியர் கலையரங்கத்தை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில் நாதன் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன் அருள்,புல்லுக்கோட்டை சிவாஜி, மாவட்ட பாசறை செயலாளர் பணக்கரை பிரபு ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன்,மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் பெமினா நாகராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.