மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 02.09.2025 03.09.2025 ஆகிய நாள்களில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைப்பெற்றன.
இதில் முதல் நாள் நிகழ்வில் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை மாவட்ட வருவாய் ஆய்வாளர் க.அன்பழகன் தலைமையுரையாற்றினார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், இராஜீக்கள் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கலாவதி அரசாணைகள், ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்தும் விருதுநகர் மாவட்டம், வட்டாட்சியர் (பணி நிறைவு) மாரிமுத்து அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்தும் மதுரை தியாகராசர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் க.தட்சணாமூர்த்தி மொழிப்பயிற்சி குறித்தும் மதுரை தியாகராசர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ந.செ.கி.சங்கீத் ராதா ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு குறித்தும் பயிற்சி அளித்தனர்.

03.09.2025 அன்று விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் முனைவர் மு.முத்துமுருகன் அவர்கள் கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு குறித்தும் விருதுநகர் மாவட்டம், ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் செ.பாலமுருகன் கணினித் தமிழ் குறித்தும் மதுரை முனிச்சாலை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முனைவர் சண்முகதிருக்குமரன் ஆட்சிமொழி ஆய்வு குறைகளைவு நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். பங்கேற்றோர் கருத்துரை. விளக்கம் பெறப்பட்டு பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வில் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா வரவேற்புரையுடன் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் தொடங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் தலைமையுரையாற்றினார். அவர் அரசு பணியாளர் மற்றும் அலுவலர்களுக்குத் தமிழ்மொழியின் சிறப்பு பற்றியும் அலுவலகங்களில் தமிழில் கோப்புகள், பதிவேடுகளைத் தமிழில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மதுரை மாவட்டம், தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் இரா.இரவி, திருமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் (பணிநிறைவு) முனைவர் கருமுருகேசன், மதுரை வள்ளலார் இயற்கை அறிவியல் மைய நிறுவனர் ஆதிரை சசாங்கன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து அரசுப் பணியாளர் மற்றும் அலுவலர்களுக்குப் சிறப்பிக்கப்பெற்றது. பங்கேற்புச்சான்றிதழ்களும் ஆட்சிச்சொல்லகராதியும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.