• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மல்லுகட்டும் செல்வ பெருந்தகை

ByKalamegam Viswanathan

Feb 20, 2025

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றத்திற்கு பின்
செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசல் தலைவர்களிடையே குழப்பம் என்ற நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப் பெருந்தகை பதவி ஏற்றதும் மாநிலம் முழுதும் தனது ஆதரவாளர்களாகவும், தனக்கு சாதகமானவர்களுக்கு பதவி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழக முழுவதும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அறிவுறுத்தலின்படி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள உதயபானு வழிகாட்டுதலின்படி, தமிழக இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் தமிழக முழுவதும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஏழு நிர்வாகிகள் ஏழு மண்டலங்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டு தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள செல்வப் பெருந்தகை கட்சியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள தனக்கு வேண்டியவர்களையும், தனது சமூகம் சார்ந்த ஆதரவாளர்களாகவும் நியமனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள், குழப்பங்கள் உள்ள நிலையில் தற்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலிலும் செல்வப் பெருந்தகை குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே,காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக பொறுப்பாளர்களான மண்டல பொறுப்பாளார் முருகன் முனிரத்தனம், செய்தி தொடர்பாளர் ராம்ஜி, மற்றும் செயற்குழு உறுப்பினர் துலா ரவி ஆகியோரிடம் புகார் அளித்தும் எப்பத நடவடிக்கையும் இல்லை.

இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை 18 .1. 2025 முதல் நடைபெற்று வருகிறது வரும் பிப்ரவரி 27.02. 25 மாலை 5 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முடிவு பெறுகிறது.

தற்போது மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக 3 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் செல்வப் பெருந்தகை அணி சார்பாக, உசிலம்பட்டி தாலுகா பண்ணைப்பட்டி போத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகுமுத்து மனைவி சீதா (வயது 39)என்ற பெண் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக போட்டியிடுகிறார்.
மற்றும் மதுரை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மகன் சௌந்தர பாண்டியன், (வயது 32) மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் வித்யாபதி (வயது 31)என மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வயது வரம்பு 35 என விண்ணப்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செல்வப் பெருந்தகை அணி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சீதாவிற்க்கு 39 வயது ஆகிறது.

விதிமுறைகளின் படி, அவர் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட முடியாது .

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார் கே மற்றும் ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனாலும் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தனது சொந்த செல்வாக்கினால் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் விதிமுறைகளை மீறி செயல்படுகிறார்.

இதனால் கட்சி நிர்வாகிகளிலேயே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அகில இந்திய தலைமைக்கு புகார் அளித்தும் மதுரை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெளிப்படை தன்மையில்லாமல் வெறும் கண்துடைப்பான தேர்தல் நடைபெறுவதற்கு பதிலாக கட்சியிலிருந்து நேரடியாக உறுப்பினர்களை நியமனம் செய்யலாம் என காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.