மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார் மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் சிறப்புரையாற்றினார்.

சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் வரவேற்றார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, துணை தலைவர் முருகேஸ்வரி மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி பிரசன்னா, வசந்தி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்ற சோழ வந்தான் தொழிலதிபர் மணிமுத்தையாவுக்கு பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.