விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு அய்யப்பன் எம்.எல்.ஏ. மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அய்யப்பன் எம்எல்ஏ விடம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்து ஆய்வு செய்த அய்யப்பன் எம் எல் ஏ கூறுகையில்.., உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குரிய சம்பளத்தை எனது சொந்த நிதியிலிருந்து வழங்குவேன் என உறுதி அளித்து சென்றார். அதன் பின்பு 30க்கும் மேற்பட்டோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு பள்ளியில் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த அனைவரையும் பள்ளிக்கு நேரில் வர செய்து அய்யப்பன் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைமை ஆசிரியர் பொதுமக்கள் சார்பாக 5 பெண் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் முழு ஆண்டு தேர்வு முடியும் வரை தனது சொந்த நிதியிலிருந்து சம்பளம் வழங்குவதாக அய்யப்பன் எம்எல்ஏ கூறினார். அவருக்கு எட்டூர் கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.






