• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அனுமதியின்றி காரில் கொண்டு செல்லபட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் சந்திப்பில் இன்று சாத்தூர் நகர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி காரை போலீஸார் நிறுத்தியும் கார் நிற்காமல் சென்றது.

இதை பின்தொடர்ந்த சாத்தூர் காவல் நிலைய போலீஸார் சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமத்தில் வைத்து கிராம மக்கள் உதவியுடன் போலீஸார் காரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் காரில் சிவகாசியிலிருந்து-கோவில்பட்டிக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சாத்தூர் நகர் போலீஸார் ரேஷன் அரிசி கடத்திய கார் ஒட்டுனர் வெள்ளையாபுரத்தை சேர்ந்த கமலகண்ணன்(24) என்பவரை கைது செய்து கார் மற்றம் காரில்இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியினை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.