ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு எதிரொலியாக கொடைக்கானலில் சோதனை சாவடி அமைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல், கொடைக்கானலுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு இஸ்ரேல் நாட்டினர் வந்த வண்ணம் உள்ளனர் அவர்கள் தங்கி உள்ள பகுதிக்கு முன்பாக போலீசார் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் தங்கியுள்ள பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. காமிராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.




