• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நடிகர் பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம்?

நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த், 17 வது வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் பிரசாந்த்.

முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்! 1990, 2000 ஆண்டுகளில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த பிரசாந்த், வண்ண வண்ண பூக்கள், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா, ஷங்கரின் ஜீன்ஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.

2005 ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் திருமணமான மூன்று ஆண்டுகளில் விவாகரத்து பெற்று, இருவரும் பிரிந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

48 வயதாகும் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது! பெண் பார்த்து முடிவு செய்த விட்டதாக வும், விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை தியாகராஜன் வெளியிட உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன! இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக பிரசாந்தின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்!