திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ளது, திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் வீடு.

இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை DSP.நாகராஜ் தலைமையிலான போலீசார் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அவர் பல லட்சங்களை பெற்றதாக தகவல் வந்ததால் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.















; ?>)
; ?>)
; ?>)