சென்னை அடுத்த தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சாரண–சாரணியர் நிறுவன நாள், மாநில விருது வழங்கும் விழா, மற்றும் சாரண இயக்க இணையதள தொடக்க விழா என மூன்று நிகழ்வுகள் ஒரே மேடையில் வெகு விமர்சையாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சுமார் 7,000 சாரண–சாரணியர்களுக்கு மாநில அளவிலான விருதுகளை வழங்கினார்.
பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் சாய்ராம் கல்விக் குழுமம் சார்பில் ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வட்டார கல்வி அலுவலகத்தை காணொளி வழியாக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா, சாய் பிரகாஷ் லியோ முத்து, முதன்மை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
“2019 முதல் வழங்கப்படாத சாரண–சாரணியர் மாநில விருதுகளை இவ்வாண்டில் வழங்கி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் 75,000 மாணவ மாணவியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்,”
எனத் தெரிவித்தார்.
“சாரண இயக்கம் தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை கற்றுத்தரும் இயக்கமாகும். திமுக ஆட்சியிலிருந்து உறுப்பினர் எண்ணிக்கை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்ந்துள்ளது; விரைவில் 15 லட்சத்தைத் தாண்டும்,”
என்றும் கூறினார்.

“சாரண இயக்கத்துக்கான தலைமை அலுவலகம் அமைக்க ரூ.9 கோடி நிதி முதல்வர் ஒதுக்கியுள்ளார்; பணிகள் நடைபெற்று வருகின்றன,”
எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும், திருச்சியில் நடைபெற்ற சாரண ஜாம்புரி விழாவில் ஆறு நாடுகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், தமிழ்நாடு மாணவர்கள் பெரும் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.











; ?>)
; ?>)
; ?>)