• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு.. அன்பில் மகேஷ் அறிவிப்பு

Byகாயத்ரி

Jan 27, 2022

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஆட்டம் கண்டிருப்பதால் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

அதன்பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து கடந்த 2021 நவம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் உருவெடுத்த கொரோனா தொற்றால் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு சில கட்டுபாடுகளுடன் தான் இயங்கும் என்று தெரிகிறது.