மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மருதம்பட்டியை சேர்ந்த சிவஞான கண்ணன் மகன் பாண்டிச்செல்வம் பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.,

இந்நிலையில் இன்று பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெறு வருவதால் பத்தாம் வகுப்பிற்கு மதியம் தேர்வு நடைபெற உள்ள சூழலில்,
பள்ளி மாணவன் தங்கள் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது மதுரை -தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.

சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் எந்த வாகனம் எங்கிருந்து சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,இதனால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சாலையைக் கடக்க முற்பட்ட பள்ளி மாணவன் மீது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகன மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.