பறவை சத்தியமூர்த்தி நகரில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு
200 ககும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்தும் அவலம்
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்திநகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி கடந்த ஏழாம் தேதி முதல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிப்புறக்கணிப்பு போராட்டத்திலும், காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
12வது நாளாக காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் இன்று 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தங்களது பெற்றோர்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு காட்டுநாயக்கன் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிட போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து 12வது நாளாக சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது
மேலும் அவர்கள் கூறுகையில் அரசு தரப்பில் அமைச்சர்கள் யாரும் இதுவரை எங்களை வந்து சந்திக்காதது மிகுந்த வேதனையை அளிக்கிறது தேர்தலின் போது வீடு தேடி வந்து வாக்குகளை கேட்டார்கள் தற்போது எங்கள் குறைகளை கேட்க வர மறுக்கிறார்கள் ஆகையால் எங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் என்று கூறினர்

200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த 12 நாட்களாக பள்ளிக்கு செல்லாததால் அவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் ஆகையால் அரசு விரைந்து இவர்களின் கோரிக்கையை பரிசீளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.