• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

ByN.Ravi

Aug 27, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் மற்றும் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை கலந்து
கொண்டு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர்
ரகுபதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியர் பழனியம்மாள், விளக்க உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் மரியஜோசப் ராஜ், வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,பள்ளிக்கு வருகை இந்த பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதில், தங்களது பிள்ளைகள் எவ்வாறு
கல்வி கற்கின்றனர். அவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருவதை கண்காணிக்க வேண்டும் தங்களின் பிள்ளைகள் தவிர தங்கள் அருகாமையில் வசிக்கும் குடும்பத்தாரின் பிள்ளைகளையும், இப்பள்ளியில் சேர்த்து பயனடைய வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும். பள்ளிக்கு வருகை தரும் மாணவன் தினந்தோறும் வீட்டுக்கு வந்தவுடன் வீட்டு பாடங்களை படிக்கிறாரா என்று கண்காணிக்க வேண்டும். கல்வியில் சிறந்து அனைத்து மாணவர்களும் முன்னேறுவதை இப்பள்ளி விரும்புகிறது என்று தெரிவித்தார் . அரசு பள்ளி என்பது அரசு நேரடி பார்வையில் உள்ளது . தங்களது பிள்ளைகளை சேர்க்கும் வரை கவலைப்படும் பெற்றோர் பின்னர், அதை கண்டு கொள்வதில்லை. இப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவனிடம் தனது தந்தை அல்லது காப்பாளர்களை அழைத்து வரச் சொன்னால் அதுவும் வருவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். தனியார் பள்ளியில்
பணம் கட்டி படிக்க வைத்து பேரன்ட்ஸ் மீட்டிங் என்றவுடன் உடனடியாக அங்கு செல்வது ஆனால், அனைத்து சலுகைகளும் வழங்கும் அரசு பள்ளிக்கு வருவதில்லை என்பதை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்திற்கு, தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதில், காந்திகிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக கல்லணை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்டார். இவர்களுக்கு, இருவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை சிறப்பு விருந்தினர் ரகுபதி, ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், ஆகியோர் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கும் கைத்தறி ஆடை அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பள்ளியில், படித்த முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில், முதுகலை ஆசிரியர் மணிகண்டன், நன்றி தெரிவித்தார்.