• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மூன்றாவது முறையாக சிறப்பு விருதைப் பெறும் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்..!

Byகிஷோர்

Oct 14, 2021

சிறப்பாக செயலாற்றிய வருவாய் நிர்வாகத்திற்கான சிறப்பு விருதினை தொடர்ந்து மூன்று முறை பெற்ற சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.


விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறையின் கீழ் 7 வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் நிர்வாகத்தில் சிறப்பாக செயலாற்றிய வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த இரண்டு முறையாக சிறப்பாக செயலாற்றிய வருவாய்த்துறை அலுவலகத்திற்கான விருதினை சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் பெற்று வந்தது. இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்ட அரங்கில் இந்த ஆண்டிற்கான சிறப்பாக செயலாற்றியதற்காக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.


தொடர்ந்து 3 முறை சிறப்பாக செயலாற்றியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தால் சுழற்சி முறையில் வழங்கப்படும் வெற்றிக் கோப்பையை சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. மேலும் சிறப்பாக செயலாற்றியதற்காக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனை கொண்டாடும் விதமாக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான பணியாளர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.