மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஐந்தாவது நாளாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும்.

அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் -18 ஆம் தேதி நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தற்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பேருந்து அருகே உள்ள மேலவாசல் பகுதியில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.