• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூரில் மணல் குவாரிகள் மீண்டும் அதிரடி ரெய்டு..!

Byவிஷா

Oct 18, 2023

கடந்த மாதம் கரூரில் மணல் குவாரிகள் அமலாக்கத்துறையினரால் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நன்னியூரில் ஆய்வு நடத்தியிருப்பது நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. குவாரி ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர், புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால், அடுத்த மல்லம்பாளையம் கிராமம் அருகில் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் குவாரிகளின் ஒப்பந்ததாரர் வீடுகளில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் கரூரில் செயல்பட்ட மல்லம்பாளையம் மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு காத்திருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் மணல் குவாரி செயல்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லம்பாளையம் மற்றும் நன்னியூரில் மணல் குவாரிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையானது 6 மணி நேரத்திற்கு பிறகு முடிவடைந்தது.
ஆனால் இன்று மதியம் 12 மணியளவில் மீண்டும் நன்னியூர் காவிரி ஆற்றிற்கு 2 வாகனங்களில் 2 அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் வரப்பாளையத்தில் உள்ள நன்னியூர் புதூர் மணல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ளிச் சென்றதை பார்த்த அதிகாரி, இது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் நீர்வளத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வருவதினால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.