கரூர் மாவட்டம் மன்மங்கலத்தை அடுத்த செவந்தி பாளையத்தை ஒட்டிய காவிரி ஆற்றில் நேற்று மதியம் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அரசு சொத்து கொள்ளை போகிறது.

அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை என்றும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை என யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், இது பொதுவெளியில் பதிவிடப்படுகிறது.

இதன் பிறகாவது நடவடிக்கை எடுப்பார்களா??? என சமூக செயல்பாட்டாளர்கள் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு காவிரி ஆற்றில் மணல் அரசு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரவு நேரங்களில் மணல் லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பட்டபகலில் மாட்டு வண்டியில் மணல் கொள்ளை நடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.