• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திடீரென காந்தி ஆசிரமத்துக்கு வந்த சலமான் கான்

Byகாயத்ரி

Dec 1, 2021

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார்.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து சல்மான் கான், அங்குள்ள பார்வையாளர்கள் டைரியில் சில கருத்துகளை எழுதினார். பார்வையாளர்கள் டைரியில் எழுதிய சல்மான் கான், ‘நான் இங்கு வந்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன். நூற்பு இயந்திரத்தை காந்தி பயன்படுத்தினார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் மரியாதைக்குரிய இடம் இது. அன்புடன் சல்மான் கான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.