அதிமுக என்ற அரசியல் கட்சியின் 53_வது அகவை தினத்தில், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக அண்மையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜான் தங்கத்தை அறிவித்ததின் அடிப்படையில், குமரி மேற்கு, குமரி கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் என்ற நிலையில், நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு ஜாண் தங்கம் மாலை அணிவித்து வணங்கினார்.

கிழக்கு மாவட்ட நிகழ்வு தொடங்க காலை சற்று தாமதமான நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பானர்கள் எல்லாவற்றிலும், எடப்பாடி பழனிச்சாமி, தளவாய் சுந்தரத்தின் படங்கள் பெரிதாக அச்சிட்டு இருந்தது.
கட்சியினர் இரண்டு அணிகளாக திரண்டு தங்கம் திரையரங்குக்கு சாலையில் எதிர், எதிராக திரண்டு நின்றனர்.

எந்த அணியின் எண்ணிக்கை அதிகம் என்று குறிப்பிடும் படி இல்லாது இரண்டு அணிகளை சேர்ந்த ஆண், பெண்கள் கூட்டம் 250- க்கு சற்று அதிகமாக இருந்தனர்.
கடந்த காலத்தில் இருந்த உற்சாகம் இந்த ஆண்டு தெரியவில்லை யாரும் எம்ஜிஆர், அண்ணா நாமம் வாழ்க என்ற எவ்வித கோசமும் இன்றி ஒரு கட்டாய சடங்கு போல் அதிமுக வின் 53_வது ஆண்டு விழா கடந்து போனது.


மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகள் ஸ்ரீலிஜா வழங்கிய இலவச புடவையை வாங்க பெண்கள் கூட்டம் முட்டி அடித்து கொண்டு இருந்ததை காணமுடிந்தது.
