காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சோமசேகர் அப்பாராவ் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று(24.04.2025) நடைபெற்றது.

உடன் கடலோர காவல்படை தலைமையக டி.ஐ.ஜி திரு.எஸ்.எஸ்.திசிலா அவர்கள், காரைக்கால் கடலோர காவல்படை மைய காமாண்டன்ட் சௌமய் சண்டோலா அவர்கள், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி.லட்சுமி சௌஜன்யா, இ.கா.ப., அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.ஸ்டாலின் இ.கா.ப., ஆகியோர் உள்ளனர்.
