விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சடைஉடையார் சாஸ்தா கோவிலில் புஷ்பாபிஷேக விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலை முகில்வண்ணம்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூர்ணா புன்னவனைத் தாய் சமேத சடைஉடைடையார் சாஸ்தா திருக்கோவிலில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு காலையில் யாக வேள்வியுடன் சிறப்பு பூஜை தொடங்கியது. பின்னர் மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் பல வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.


பின்னர் விஷேச தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாஸ்தா காட்சியளித்தார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.




