• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இசைஞானி பிறந்தநாளுக்கு சதாபிஷேகம்… பிரபலங்கள் பங்கேற்பு..

Byகாயத்ரி

Jun 1, 2022

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு தற்போது 80 வயது பூர்த்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் சதாபிஷேகம் செய்துள்ளார். அதாவது அமிர்த கடேஸ்வரர் கோவிலில் 60 வயது முதல் 100 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கு பூர்ணா அபிஷேகம், கனகாபிஷேகம், சதாபிஷேகம், விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, மற்றும் ஆயுள் ஹோமங்கள் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால்தான் இளையராஜாவும் தனக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததால் கோவிலில் சதாபிஷேகம் செய்துள்ளார். இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, பவதாரணி, கங்கை அமரன் பாரதிராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் வருகிற ஜூன் 2-ம் தேதி அன்று இசைஞானியின் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் லைவ் கான்செர்ட் ப்ரோக்ராம் ஒன்றை இளையராஜா நடத்தயிருக்கிறார். மேலும் ரசிகர்கள் பலரும் இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.