• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரெயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன்!..

By

Aug 20, 2021

சாதாரண பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரெயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் இந்திய ரெயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக்காட்டி அவற்றை இயக்கிட ரெயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். ரெயில்வே மந்திரியை நானும் வடசென்னை எம் பி கலாநதி வீராச்சாமியும் நேரில் வலியுறுத்தினோம்

இப்போது ரெயில்வே வாரியம் இந்திய ரெயில்வே முழுவதும் உள்ள ரெயில்வே பயணி போக்குவரத்து அதிகாரிகளை பயணி வண்டிகளை மெழு,டெமு, பாரம்பரிய பழைய பயணி வண்டிகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும் அவற்றுக்கான கால அட்டவணைகளை 16.8.2021 க்குள் அனுப்பி வைத்திடவும் ரெயில்வே வாரியம் அனைத்து ரெயில்வேக்களையும் கோரியுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரெயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார் .அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர். விரைந்து பயணி வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.ரெயில்வே அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.