விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டியில் நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் நிவாரணம் கோட்டு போராடிய போது, வேற மாதிரி ஆயிரும் என போராட்டக்காரர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மிரட்டினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன சின்னகாமன்பட்டியில் நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 9 பேர் பலியானர்கள் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என பட்டாசு சாலைக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரியாபட்டி அருகே பட்டாசு சாலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கும் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது, போராட்டக்காரர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்த பொழுது, ஒழுங்காக போறீங்களா? இல்ல வேற மாதிரி ஆயிரும் என மிரட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

எங்களை சுடுவீர்களா அல்லது எங்களை அடிப்பீர்களா அடியுங்கள் என போராட்டக்காரர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
