தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக்காக தேமுதிக மறைமுகமாக பேசியதாக வந்த தகவல் குறித்து பேசிய பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
இந்த செய்தியை நானே அன்னிக்கு பேப்பர்ல பார்த்தேன். அந்த செய்தயை அன்னைக்கு படிக்கும்போது தான் எனக்கே தெரியும். நீங்க வந்து பத்திரிகை நண்பர்கள் இல்லாததையும், பொல்லாததையும் ஏதோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதறீங்க பல விஷயத்தை… இது முற்றிலும் ஒரு தவறான ஒரு செய்தி. நான் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டது மாதிரி, நான் பேசியது மாதிரி ஒரு கருத்தை நீங்க பதிய வச்சு இருக்கீங்க. அந்த மாதிரியெல்லாம் எதுவும் கிடையாது. மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் என்றைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கிடையாது.
எப்போது தேர்தல் நடந்தாலும், ஒட்டுமொத்தமாக எங்களுடைய மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி… அவர்களுடைய ஆலோசனையை பெற்று, நிச்சயமாக அதற்குப் பிறகு ஒரு தெளிவான முடிவெடுப்பது தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். அதனால் யாரிடமும் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, அது ஒரு தவறான செய்தி என தெரிவித்தார்.