• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி-தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

ByA.Tamilselvan

Apr 11, 2023

தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம்அனுமதி வழங்கி உத்தரவி பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது