குஜிலியபாறையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் அதிபர் கொண்டுவரப்பட்ட ரூ லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாசில்தார் நந்தகோபால் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில் குஜிலியம்பாறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பாளையத்திலிருந்து குஜிலியம்பாறைக்கு க வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வந்த குஜிலியம்பாறையை சேர்ந்த தொழிலதிபர் ரேணுகோபால் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ 3 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்ததை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், உதவி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.



