• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வாகன சோதனையில் ரூ.3.26 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி வாழதண்டாயுதபாணி கோயில் பிரிவு முன்பாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ் பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராமநாயக்கன்பட்டி துரைராஜ் என்பவரிடம் சோதனை செய்த போது ஆவணம் இல்லாமல் வைத்திருந்த ரூ.71,500பறிமுதல் செய்தனர்.

அதேபோல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி முத்துராமன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஹவுஸ் முகைதீன் கான், ஏட்டு மகாலட்சுமி ஆகியோர் மாதா கோவில் முன்பாக வாகன சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாண்டி குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஏ டு மலைச்செல்வி ஆகியோர் செமினிப்பட்டி செட்டிகுளம் முன்பாக வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பேட்டை புதூர் அழகர்சாமி என்பவர் வைத்திருந்த ரூ.1.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதில் ரூ.3 லட்சத்து26 ஆறு ஆயிரத்தி,500 வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்தி ரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.