• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‛ஆர்ஆர்ஆர்’ ட்ரெய்லர் வெளியானது

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் தயாராகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்’. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் உள்ளது.சுதந்திர போராட்ட காலத்தை மையப்படுத்தி கொமரபீம், அல்லுரி சீதாராம ராஜூ ஆகியோரின் வாழ்க்கை பயணமாக கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

கீரவாணி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று காலை 11 மணிக்கு(9.12.2021) டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலர் வெளியானசிலநிமிடங்களிலேயேகுறிப்பாக தெலுங்கு டீசர் வெளியான 10 நிமிடத்தில் 5 லட்சம் பார்வைகளையும், 1.2 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது டிரைலர் நமக்கு உணர்த்தும். கதைக்களம் இதுதான் நெருங்கிய நண்பர்களாக ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் இருக்கிறார்கள். ஆங்கிலேய படையில் இருக்கிறார் ராம் சரண்.

ஆங்கிலேயேர்களுக்கு எதிராக செயல்பட்டதாக நண்பர் ஜூனியர் என்டிஆரை கைது செய்யும் அளவுக்கு போகிறார் ராம் சரண். ஒருகட்டத்தில் ஆங்கிலேயேர்களின் கொடுமையை பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராகவே களமிறங்குகிறார் ராம்சரண்.

அதன்பின் நண்பர்கள் ஜூனியர் எடிஆர், ராம் சரண் இருவரும் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவது போன்று கதை நகருவதை புரிந்து கொள்ள முடிகிறது. கதை என்னமோ சாதாரணமானது போலத்தான் தெரிந்தாலும் ராஜமவுலி திரைக்கதை மற்றும் டிரைலரில் அவர் காட்டி உள்ள விஷூவல் நிச்சயம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என புரிந்துகொள்ள முடிகிறது.


ஆர்ஆர்ஆர் படம் வருகிற ஜன., 7ல் உலகம் முழுக்க சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக போகிறது.