• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

ByKalamegam Viswanathan

Mar 10, 2026

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குமாரம் பகுதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் தாய்கழகமான அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் மாற்றுக் கட்சியினரை தாய் கழகத்திற்கு வரவேற்று சிறப்புரையாற்றி பேசினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மு காளிதாஸ்கொரியர் கணேசன் அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜாமுன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் வாவிடமருதூர் ஆர்பி குமார் முடுவார்பட்டி முத்துகிருஷ்ணன் கவுதம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் தண்டலை ஆனந்த் கச்சை கட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி விருகை தருமர்பொதும்பு சாமிநாதன் ராகுல் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சௌந்தர் மகளிர் அணி இணைச் செயலாளர் சாந்தி மகாலட்சுமி கோபுரசாமி தங்கம் வக்கீல் காசிநாதன் சுந்தர ராகவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.