• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழனியில் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தம்..!

Byவிஷா

Aug 19, 2023

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை ஒரு மாதத்திற்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை ரோப் கார் சேவை நிறுத்தப்பட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வருடத்திற்கு ஒரு மாத காலத்திற்கு மேலாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு ரோப் காரில் உள்ள பாகங்கள் மாற்றப்படும். அதனால் இன்று முதல் ஒரு மாதம் ரோப் காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரோப் கார் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.