• Sat. Mar 22nd, 2025

கோவையில் பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளைச்சம்பவம்..!

Byவிஷா

Jan 26, 2024

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பட்டப்பகலில் 10க்கும் மேற்பட்ட கும்பல் தொழிலதிபர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழில் அதிபர் கமலேஷ் என்பவரது வீட்டில் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை கட்டி போட்டு பணம், நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட்டப் பகலில் வீட்டுக்குள் நுழைந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து துணிகரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் நேரில் விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் கமலேஷ் பஞ்சு தொடர்பான தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கமலேஷ் வீட்டில் இல்லாத சூழலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. 13 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகை கொள்ளை போய் உள்ளது. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.