• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது

ByT.Vasanthkumar

Feb 17, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளையடித்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரோடு TO புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள பில்டிங் டாக்டர் என்ற கடையில் கணிணி மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போய்விட்டதாக கடையின் உரிமையாளர் பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ராஜி மகன் ஆனந்த் என்பவர் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் A.பழனிச்சாமி தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது முத்துசாமி (50) த/பெ ஆறுமுகம் ஆதனூர் பெரம்பலூர் என்பவர் என்பது விசாரனையில் தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கணிணி, UPS, BLUG BOX மற்றும் ரூ.9500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த பெரம்பலூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.