• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

7 ஊராட்சிகளில் சாலைப்பணிகள் துவக்கம்.,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், 7 ஊராட்சிகளின் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் 9 சாலைப்பணிகள் சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

இரண்டாம்புளிக்காடு ஊராட்சி அலமதிக்காடு முதல் மார்க்கெட் சாலையை வலுப்படுத்தும் பணி ரூ. 43 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி சாலை ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும், நாடியம் ஊராட்சி நவக்கொல்லை சாலை ரூ.94 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், மருங்கப்பள்ளம் காமாட்சி அம்மன் கோவில் சாலை, ரூ.38 லட்சம் 20 ஆயிரம் மதிப்பீட்டிலும், குருவிக்கரம்பை ஊராட்சி பள்ளிவாசல் – காமாட்சி அம்மன் கோவில் இணைப்புச் சாலை 14 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டிலும், குருவிக்கரம்பை பள்ளிவாசல் கல்வெர்ட் முதல் சேதுரோடு சாலை வரை ரூபாய் 46 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பீட்டிலும், குஞ்சு தெருசாலை ரூபாய் 23 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், ரெட்டவயல் அம்புலி ஆறு குவாரி சாலை 78 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், சாம்பான் கோவில் சாலை ரூபாய் 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், முதுகாடு தேத்தாடிக்கொல்லைச்சாலை ரூபாய் 34 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.4 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், மனோகரன், திமுக ஒன்றிய செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம்,
வை.ரவிச்சந்திரன், எஸ்.ஞானபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் தனபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்கள், கட்சியினர், கிராம பொதுமக்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.