• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ByKalamegam Viswanathan

Mar 10, 2025

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாகன விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை மதித்து வாகன ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து அதிகரித்து வரும் வேளையில் பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காக மதுரை மாநகர ஆணையாளர் லோகநாதன் உத்தரவின் பேரில், இணை ஆணையாளர் வனிதா வழிகாட்டுதலில், உதவி ஆணையாளர் செல்வின் மற்றும் இளன்மாறன் தலைமையில், திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் காவலர்கள், மதுரை வடக்குவெளி வீதி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி சிக்னல் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,

போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டி சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுங்கள் எனவும், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது ஆபத்தை விளைவிப்பதோடு விளக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது எனவும், கட்டாய தல கவசம் அணிந்து, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது எனவும், சிக்னல்களை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் காவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். அதிவேகம் ஆபத்தில் முடியும் என்பதற்கு ஒரு நிமிட தாமதமாக சென்றால் இன்று மாறப்போவதில்லை.

அதனால் வேகத்தை குறைத்து விவேகமாக சென்றால் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் நம் குடும்பமும் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.