• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ByKalamegam Viswanathan

Feb 14, 2024

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் போக்குவரத்து காவல்துறை காவல் சார்பில், நகர் ஆய்வாளர் சீமான் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் இராஜபாளையம் காவல்துறை துணைக்காணிப்பாளர் நாகராஜன் வழிகாட்டுதலின் பேரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். கலை குழுவினர் நடனமாடியும் தலைக்கவசம் அணியாமல் மற்றும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்தது அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மணைக்கு கொண்டு செல்வது என தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பரமசிவம் பாரதராஜன், ஆகியோர் அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டியதோடு தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.