• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயரில் சாலை..!

Byவிஷா

Sep 2, 2023

சென்னையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சாலிகிராமம் குமரன் சாலைக்கு இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா இசை மண்டலம் என்று பெயரிட தீர்மானம் செய்யப்பட்டது.
அதனைப் போலவே பிரபல மாண்டலின் இசை கலைஞர் மாண்டலின் சீனிவாசன் வசித்து வந்த சாலிகிராமம் குமரன் நகர் பிரதான சாலைக்கு, மாண்டலின் சீனிவாசன் பிரதான சாலை என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.