ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் கக்கரைக்கோட்டையில் பிரிந்து தெக்கூர் வழியாக செல்லம்பட்டி செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஆகும்.

இந்த சாலையை அகலப்படுத்த கோரி இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த சாலை தற்பொழுது போக்குவரத்திற்கு ஏற்ற நிலையில் இல்லை என்பதால் சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த சீரமைக்கும் பணிகளை ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் விவேகானந்தன் மற்றும் உதவிப் பொறியாளர் ஜெயவேல் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். மோசமாக இருந்த சாலையை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.