மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியை இணைத்து பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் சுமார் 18 கோடி மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.,

பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற சூழலில், நகர் பகுதியில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக மூன்று முறை முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு சிறப்பு சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டது.,
இந்நிலையில் இன்று உசிலம்பட்டியின் நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள், வணிக வளாகத்தின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சீதாராமன், உசிலம்பட்டி உதவி ஆட்சியர் உட்கர்ஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.,

விரைவில் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி முடிவடையும் பட்சத்தில் உசிலம்பட்டி நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.,




